Kallakurichi: பூ, பழம், வெற்றிலை பாக்குடன் மனு கொடுக்க முயன்றதால் பரபரப்பு!

Advertisements

திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தாம்பூலத்தட்டில் பூப்பழம் வெற்றிலை பாக்குடன் கோரிக்கை மனு கொடுத்துக் கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சாங்கியம் மதுர காந்திநகர் கிராமத்தைச் சேர்ந்த சௌபாக்கியம் என்பவருக்கு 1991 ஆண்டு மாவட்ட ஆட்சியர் அவர்களால் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது.ஆனால் பட்டா வழங்கிய நிலையில் வீடு கட்டி வாழ்ந்து வரும் நபருக்கு இதுவரைபட்டா வழங்காமல் லஞ்சம் பெற்றுக் கொண்டு திருக்கோவிலூர் வருவாய்த்துறை வட்டாட்சியர் அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமிக்கு என்பவருக்குப் பட்டா வழங்கி ஆவண அபகரிப்பு மோசடி செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து சௌபாக்கியம் மகள் முனியம்மாள் வீடு கட்டி மின் இணைப்பு பெற்று வாழ்ந்து வரும் நபருக்குப் பட்டா வழங்க வேண்டும் போலியாக வழங்கிய முனுசாமி பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் வருவாய் வட்டாட்சியரிடம் தாம்பூல தட்டில் பூப்பழம் வெற்றிலை பாக்குடன் கோரிக்கை மனுவை எடுத்துச் சென்று கொடுப்பதற்கு முயற்சி செய்தனர். அப்போது காவல்துறை அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தி,  பொருட்களைப் பெற்றுக் கொண்டு தனி நபர்களாக வருவாய் வட்டாட்சியரிடம் தங்களது கோரிக்கைகளைப் பேசுவதற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *