
ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் 3 நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.
அவருடன் அந் நாட்டு அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.வரலாறு, கலாச்சாரம், பொருளாதாரம் ரீதியாக ஓமன் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் நீண்டகால நட்புறவு உண்டு. இரு நாட்டு மக்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நேரடி தொடர்பு இருந்து வருகிறது.W
இந்நிலையில், ராஜ் [பவன் வந்தடைந்த ஓமன் சுல்தானுக்கு ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி முறைப்படி வரவேற்பு அளித்தனர் ஓமன் சுல்தானின் இந்திய சுற்றுப்பயணம் இரு நாடுகளுக்கிடையில் பிராந்திய நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஓமன் சுல்தான் இந்தியா வருவது இது தான் முதல் முறையாகும். அவரது சுற்றுப்பயணத்தால் இந்தியா- ஓமன் இடையிலான வெளியுறவு தொடர்பு மேம்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

