kallakurichi: அரசு மருத்துவமனையில் இங்குபேட்டருக்கு கல் வைத்து முட்டுக் கொடுத்த அவலம்!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெறும் இங்குபேட்டருக்கு  கல் வைத்து முட்டுக் கொடுத்த அவலம் ஏற்ப்பட்டுள்ளது, பச்சிளம் குழந்தையின் உயிரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் விளையாடுவதாகப் பெற்றோர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வருவதற்காக முதல் சிகிச்சையான இங்பெட்டரில் வைத்துச் சிகிச்சை பெறுவது வழக்கம். இந்தத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வரும் பச்சிளம் குழந்தை ஒன்று இங்குபேட்டரில்   கல் வைத்து முட்டு கொடுத்துச் சிகிச்சை பெற்று வருவதை பார்ப்பவரை அதிர்ச்சி உள்ளாகியுள்ளது.

மேலும் குழந்தைகளின் தீவிர சிகிச்சையான இன்குபேட்டர்  சிகிச்சையிலேயே  இதுபோல அவல நிலை ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகப் பச்சிளம் குழந்தையின் உயிரோடு மருத்துவக் கல்லூரி நிர்வாகம்  விளையாடுகிறதா எனக் கேள்வியும் எழுந்துள்ளது.

அதேபோல அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  பெயர் அளவிற்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்தாலும் கூட அங்கு முறையாகச் சிகிச்சை அளிப்பதில்லை எனவும் அதேபோலப் பேருந்து வசதிகள், குடிநீர் வசதிகள் கழிவறை வசதிகள் அவசரத்திற்கு தொடர்பு கொள்ள முடியாத ஒரு அவல நிலையும் நீடித்து வருவதோடு பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமோ அல்லது மருத்துவ கல்லூரி நிர்வாகத் திட்டமோ பொதுமக்கள் சார்பிலும் அல்ல சமூக ஆர்வலர்கள் சார்பிலும் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. இதுபோலச் சம்பவங்கள் எல்லாம் அரங்கேறாமல் இருக்க மாவட்ட நிர்வாகமும் மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *