Wako India Open Kickboxing Championship: 11 பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

டில்லியில் நடைபெற்ற வாக்கோ இந்தியா  3 வது சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது,

வாக்கோ இந்தியா சார்பில் 3வது சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர்  டில்லியில் அண்மையில் நடைபெற்றது.இதில் துருக்கி, ரஷ்யா, மலேசியாஇந்தியா, என 19 நாடுகளிலிருந்து, ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர்.இதில் இந்தியா சார்பாகக் கோவையிலிருந்து ஆண்ட்லி ப்ளோக் பெல்ட் அகாடமி, மற்றும் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமியில் பயிற்சி பெறும் ஆறு மாணவர்கள், ஒரு மாணவி உட்பட ஏழு பேர் கலந்து கொண்டனர்.

இதில் பாய்ண்ட் ஃபைட், லைட் காண்டாக்ட், கிக் லைட் மற்றும் ரிங் ஸ்போர்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்ட ஏழு பேரும்  இரண்டு தங்கம், நான்கு வெள்ளி, ஐந்து வெண்கலம் என 11 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். இந்நிலையில் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய  மாணவ, மாணவிகளுக்கு இரயில் நிலையத்தில், பயிற்சியாளர் ஆண்ட்லி ஆனந்த் மற்றும் கோவை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் பொது செயலாளர் பிரேம் குமார் ஆகியோர்   உற்சாக வரவேற்பு வழங்கினர். இந்தியா சார்பாகக் கலந்து கொண்டு நாட்டிற்கும், தமிழகத்திற்கும், கோவை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள கிக் பாக்சிங் வீரா்களை இரயில் நிலையத்தில் சந்தித்த இராணுவ வீர்ர்கள் உட்பட  பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *