Manju Warrier: படுக்கையறையில் நடிகருடன் படுகவர்ச்சி.. ஷாக்கான ரசிகர்கள்!

Advertisements

மலையாள திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வரும் மஞ்சு வாரியர், தன்னை விட வயது குறைவான நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்துள்ளதை பார்த்துப் பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டுத் திரைக்கு வந்த அசுரன் படம்மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துத் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த மஞ்சு வாரியருக்கு அடுத்தடுத்து கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் அவர் தமிழில் இரண்டாவதாக நடித்த படம் துணிவு.

துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்திருந்தார் மஞ்சு வாரியர். எச்.வினோத் இயக்கிய இப்படத்தில் கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக மிரட்டி இருந்தார் மஞ்சு. துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறனின் விடுதலை பட வாய்ப்பைத் தட்டிதூக்கினார் மஞ்சு வாரியர். அப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர அவரது லைன் அப்பில் உள்ள மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் தான் வேட்டையன். இப்படத்தின் மூலம் முதன்முறையாகச் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். வேட்டையன் படத்தை ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் ராணா டகுபதி, பகத் பாசில், அமிதாப் பச்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படி தமிழில் அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்ட படங்களில் நடிக்கும் மஞ்சு வாரியர், மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பூட்டேஜ் எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அந்தப் போஸ்டரில் தன்னை விட 14 வயது குறைவான நடிகரான விஷாக் நாயரின் மடியில் அமர்ந்து படுக்கையறையில் படுகவர்ச்சியாக அவர் கொடுத்துள்ள போஸ் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதன் மூலம் இப்படத்தில் மஞ்சு வாரியரின் கவர்ச்சி விருந்து கன்பார்ம் இருக்கும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *