
கள்ளக்குறிச்சி அருகே ஓவிய ஆசிரியர் முதல்வர் விஜய்யின் முகமூடியை முகத்தில் மாட்டிக்கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனின் படத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் செல்வம். இவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் விஜய்யின் முகமூடியை தன் முகத்தில் மாட்டிக் கொண்டு அமைச்சர் ராஜ்மோகனின் படத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார்.
இந்த ஓவியத்தை கண்ட மற்ற பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர சங்க நிர்வாகிகள் ஓவிய ஆசிரியர் செல்வத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


