
ஜோகன்னஸ்பர்க்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்கில் நேற்று நடைபெற இருந்தது. அப்பகுதியில்
மழை தொடர்ந்து பெய்தது. இதனால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனாலும் மழை நிற்காமல் பெய்தது. இதையடுத்து, மழை காரணமாகப் போட்டி ரத்துசெய்யப்படுகிறது என நடுவர்கள் அறிவித்தனர்.
போட்டி கைவிடப்பட்டாலும் தென் ஆப்பிரிக்கா தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

