தோசை என்றாலே எல்லோருக்கும் ஆல் டைம் பேவரைட் தான். அது எந்த வகையான தோசையாக இருந்தாலும் சரி. அதே போலத் தான் இந்தச் சமையல் குறிப்பு பதிவிலும் கேரளா ஸ்டைலில் தேங்காய் தோசை எப்படி செய்வது என்பதை பற்றித் தெரிந்து கொள்ளலாம். ஒரு முறை இதைச் செஞ்சு பாருங்க இனி தோசை என்றாலே இதைத் தான் நீங்களும் செய்வீங்க.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1கப்,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
வெள்ளை அவல் – 1/4 கப்,
தேங்காய் துருவல் – 3/4 கப்,
தேங்காய் பால் – 1 கப்,
உப்பு – 1/4 டீஸ்பூன்.
செய்முறை:
இந்தத் தோசை செய்ய முதலில் அரிசியையும் வெந்தயத்தையும் ஒரு பவுலில் சேர்த்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அலசியபிறகு, நல்ல தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம்வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து கால் கப் தேங்காய் எடுத்து அதன் மேல் தோல் சீவி துரு வி வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் ஒரு கப் அளவு வரும் வரை தேங்காய் பால் தயார் செய்து கொள்ளுங்கள். அதற்கு எடுக்கும் தேங்காயும் இதே போல் மேல் தோலை நீக்கியபிறகு செய்யுங்கள். அப்போது தான் தோசை வெள்ளை வெளேரென்று நன்றாக இருக்கும்.
நான்கு மணி நேரம் கழித்து அவலை கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்து விட்டுப் பத்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அதில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி வைத்து விடுங்கள். அவல் நன்றாக ஊறி விடும்.
இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் அரிசி, வெந்தயம், துருவிய தேங்காய், அவல் அனைத்தையும் சேர்த்து கொஞ்சமாகத் தேங்காய் பால் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு நைசாக அரைக்க வேண்டும் எனவே இடையிடையே தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றக் கூடாது.
மாவை அரைத்தபிறகு அதை ஒரு பவுலுக்கு மாற்றி விடுங்கள். மீதம் இருக்கும் தேங்காய் பாலையும் ஊற்றிக் கொஞ்சமாக உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து எட்டு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். எட்டு மணி நேரம் கழித்து மாவை எடுத்துப் பாருங்கள். நன்றாகப் புளித்து தோசை மாவு பதத்திற்கு வந்திருக்கும்.
அடுத்து அடுப்பில் தோசை கல் வைத்துச் சூடானவுடன் மாவை ஊற்றி இதற்குத் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சுடுங்கள். தோசை மிகவும் அருமையாக இருக்கும். இந்தத் தோசையை திருப்பிப் போடாமல் ஆப்பம் போல ஒரு புறம் மட்டும் ஊற்றி வேக வைத்து எடுங்கள் நல்ல சாப்பிட்டாகச் சூப்பராக இருக்கும். இந்தத் தோசைக்கு எல்லாவிதமான சைட் டிஷும் சூப்பராக இருக்கும்.
அது மட்டுமின்றி முழுக்க முழுக்க தேங்காய் பால் தேங்காய் வைத்துச் செய்வதால் இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது முடிந்தால் வாரம் ஒரு முறையாவது இதுபோலத் தோசை செய்து சாப்பிடுங்கள்.