Advertisements

அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் எனப் பாஜக தலைமை வற்புறுத்தியதால் அக்கட்சியுடனான கூட்டணி முறிந்ததாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் அதிமுகவை பற்றியும் அதிமுக தலைவர்களையும் பற்றியும் அவ்வப்போது விமர்சித்துப் பேசி வந்ததால் அதிமுக கூட்டணியிலிருந்துவிலகியது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி அருகே குருவரெட்டியூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் அதிமுக பொதுகூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார். அப்போது வேலைக்காரனாக இருந்தாலும் முதலாளியிடம் ஓரளவிற்கு தான் இறங்கி செல்ல முடியும்.
அண்ணாமலை சின்னப் பையன். 2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் எனப் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை வற்புறுத்தியது என்றும், இதுதான் பாஜக கூட்டணி முறிவுக்கான காரணம் எனவும் கூறியுள்ளார்.
Advertisements




