
நாடாளுமன்ற தேர்தல் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக கூட்டணியில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் விமானம்மூலம் டெல்லி சென்றுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு வாரங்களில் அறிவிக்கபடவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பாஜக சார்பாகப் போட்டியிடுபவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனையடுத்து இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்னும் சில தினங்களில் வெளியிடவுள்ளது.
எனவே தமிழகத்திலிருந்து பாஜக சார்பாகப் போட்டியிடவுள்ள வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த வகையில் இன்னும் பாஜகவின் கூட்டணி இறுதி செய்யப்படாத நிலையில், முதல் கட்ட வேட்பாளர் பட்டியலைப் பாஜக தயார் செய்துள்ளது. அந்த வகையில், தங்களது கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தர். ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டவர்களுக்கு பாஜக சார்பாகத் தொகுதிகள் வழங்கப்படவுள்ளது.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மற்றவர்கள் தாமரை சின்னத்தில் போட்யிடவுள்ளனர்.
அந்த வகையில், தங்களது கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தர். ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டவர்களுக்கு பாஜக சார்பாகத் தொகுதிகள் வழங்கப்படவுள்ளது.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மற்றவர்கள் தாமரை சின்னத்தில் போட்யிடவுள்ளனர்.
அதே நேரத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், மத்திய சென்னை, தென்காசி, காரைக்குடி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 10 தொகுதிகளின் பாஜக சார்பாகப் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலோடு தமிழக பா.ஜ்.க. தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், மூத்த தலைவர்கள் எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.கச்சட்டமன்ற குழுத் தலைவர் நைனார் நாகேந்திரன் மற்றும் மேலிடப் பார்வையாளர்கள் ஆகியோர்கள் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர். டெல்லியில் இந்தப் பட்டியலைத் தேசிய தலைமை இறுதி செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.



