Nithya Menen: வதந்திக்கு முற்றுப்புள்ளி!

தன்னிடம் தமிழ் நடிகர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மையில்லையென நடிகை நித்யாமேனன் கூறியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த நித்யாமேனன் மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துப் பிரபலமானவர். தமிழில் ஓகே கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் படங்களின் மூலம் பெரிதாகப் பேசப்பட்டது.
நடிப்பால் கவனத்தை ஈர்க்கும் நித்யாமேனனிற்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். தற்போது பிசியாக நடித்து வரும் நித்யா மேனன் குறித்த தகவல் ஒன்றி இணையத்தில் காட்டுத் தீயை போல் பரவி வருகிறது.

அதாவது சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தெலுங்கு சினிமாவில் இது போன்ற எந்தச் சிக்கல்களையும் தான் எதிர்கொள்ளவில்லை. ஆனால் தமிழ் நடிகர் ஒருவர் எனக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரெனக் கூறி நித்யா மேனன் வருத்தம் தெரிவித்ததாகத் தகவல் பரவியது. இது தமிழ் திரையுலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் தன்னை பற்றிப் பரவி வரும் வதந்திக்கு நடிகை நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டகிராம் பதிவில், இது போன்ற எந்த ஒரு நேர்க்காணலையும் தான் தரவில்லை என்றும், இது போன்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாமெனக் கூறியுள்ளார். நித்யாமேனனின் இந்தப் பதிவு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *