
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி தலைவர்களின் வாழ்த்து அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டிச் சென்னையில் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவப் படத்துக்கு முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கரின் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டிசெலுத்தினார்.துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் உருவப் படத்துக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் படத்துக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அம்பேத்கரின் கொள்கை, இலட்சியங்கள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வலிமையை அளிப்பதாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் உத்வேகத்தால் நாடு சமூக நீதிக்கான கனவை நனவாக்க அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிமைகள் மட்டுமல்லாமல் சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தித் தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம் என்று விஜய் வெளிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கிச் சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
