
தக்காளி கிரேவியானது நான் வெஜ் குழம்புகளையே பின்னுக்கு தள்ளிவிடும் அந்தளவுக்கு வேறலெவல் டேஸ்டாக இருக்கும்.
பெரும்பாலான வீடுகளில் காலை, இரவு இட்லி, தோசை சாப்பிடுவார்கள். அதனைத் தொடர்நது உணவு வகைகளில் பிரதான உணவாகச் சாப்பாத்தி தான் இருக்கும்.
அப்படி, சப்பாத்தி செய்யும்போது அதற்குச் சைட்டிஷ்ஷாக குருமா, தால், உள்ளிட்டவை இருக்கும். அதற்குப் பதில் b தக்காளி இருந்தால் போது வேற வெலவல் சைடு டிஷ் கிரேவி ஒன்று தயாராகி விடும்.
இந்தக் கிரேவியானது நான் வெஜ் குழம்புகளையே பின்னுக்கு தள்ளிவிடும் அந்தளவுக்கு வேறலெவல் டேஸ்டாக இருக்கும். முதலில் தேவையான பொருட்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
அரைப்பதற்கு:
வறுத்த வேர்க்கடலை – 3
டேபிள் ஸ்பூன் வெள்ளை எள்ளு – ஒரு டீஸ்பூன்,
ஏலக்காய் – 2,
கிராம்பு – 4,
பட்டை சிறிதளவு,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 5-6,
மிளகு, சோம்பு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
தண்ணீர் – சிறிதளவு எடுத்துகொள்ள வேண்டும்.
கிரேவிக்கு செய்முறை:
கடாயில் 3 டேபிள்ஸ் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் – 1/2 டீஸ்பூன், சோம்பு – 1/2 டீஸ்பூன் தாளிக்க வேண்டும். பின்னர் பெரிய அளவிலான பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா – 1 கைப்பிடி, கறிவேப்பிலை – 1 கைப்பிடி போட்டு நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் 300 கிராம் அளவிலான தக்காளியை போட்டு வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்கு மசிந்து வரும்போது தேங்காய் பால் – 1 1/2 கப், உப்பு – சுவைக்கேற்ப, கொத்தமல்லி போட வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் வேர்க்கடலை, எள்ளு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, இஞ்சி, பூண்டு, மிளகு, சோம்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதனையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதித்து அதன்பின் கொத்தமல்லி போட்டு இறக்கினால் வேறவெலவல் தாக்களி கிரேவி தயாராகி விடும். இதனை சாப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சாப்பிட சாப்பிட சாப்பிட்டு கொண்டே இருப்போம்.


