John Gorrie: குளீர்பதன தொழில்நுட்பத்தின் தந்தை பிறந்த தினம்!

Advertisements

குளிர்பதன தொழில்நுட்பத்தின் தந்தை என்று போற்றப்படும்  ஜான் கோரி 1803- ஆம் ஆண்டு அக்டோபர் ‘03 -ஆம் தேதி அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் பிறந்தார்.

இவர் சமுதாய சேவைகள், வர்த்தகங்களில் நாட்டம் செலுத்தினார். வெப்ப மண்டல நோய்கள்குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மேலும் இவர் சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டார். 1841-ல் சமரச மைய நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மலேரிய அறைகளைக் குளிரூட்டும் முறைகள்குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு, கட்டுரைகள் வெளியிட்டார். இவரின் கட்டுரைகள் அறிவியல் இதழ்களில் வெளிவந்தது. பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பனிக்கட்டிகளை உருவாக்கி அறையைக் குளிரூட்டக்கூடிய நீராவியில் இயங்கும் இயந்திரங்களைக் கண்டுபிடித்தார்.

தற்பொதைய அனைத்து விதமான குளிரூட்டும் இயந்திரங்கள் , இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தின் கோட்பாடுகளின்  அடிப்பையில் இயங்குவதற்கு காரணம். குளிர்பதன இயந்திரம், பனிக்கட்டி தயாரிக்கும் வழிமுறை, ஏர்கண்டிஷன் கருவிகளை முதன்முதலில் உருவாக்கியவர் என்ற பெருமையைப் பெற்றார். கடைசிவரை மனித நேயத்துடன் விளங்கிய ஜான் கோரி உடல் நலக் குறைவால் தனது 55 வயதில் 1855 -ஆம் ஆண்டு மறைந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *