
அடர் வனப்பகுதியில் கால்நடையாக சிறிது தூரப் பயணம்…
கொஞ்சும் பறவைகளின் ஓசைக் கேட்டுக்கொண்டே, பசுமைக் காற்றை சுவாசித்தபடி மரங்கள் சூழப்பட்ட காட்டின் இடையே திடீரென ஓங்கார ஓசை, கொட்டும் அந்த அருவினைக் காண சற்று திடமான மனநிலையும், விரிந்த கண்களும் தேவை. அப்படியொரு வியப்பூட்டும், உச்சி நரம்பினை சிலிர்க்கள் செய்யும் நீர்வீழ்ச்சிதான் ஜோக் நீர்வீழ்ச்சி. வாருங்கள், அப்படி அங்கே என்னவெல்லாம் உள்ளது ? எப்படிச் செல்வது என பார்க்கலாம்.
எங்கே உள்ளது?
கர்நாடகாவில் இருந்து பங்காபூர் வழியாக சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஜோக் நீர்வீழ்ச்சி. மேற்குத் தொடர்ச்சியின் சோலைவனக் காடுகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் நீர் சரவதி வனக் காட்டில் பெரிய நீரோடையாக உருவெடுக்கிறது. அங்கிருந்து அடர் வனக்காட்டின் ஊடாக பயணித்து அருவியாக கொட்டும் காட்சி நிச்சயம் உங்களை பிரம்மிப்பில் ஆழ்த்திவிடும்.
ஜோக் நீர்வீழ்ச்சி;
மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் இருந்து தங்கு தடையின்றி பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி 830 அடி உயரத்திலிருந்து கீழே கொட்டும் ஜோக் நீர்வீழ்ச்சியின் அந்த கவின்மிகு காட்சியைக் காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும் இங்கு படையெடுக்கின்றனர். ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது.
அழகு காட்சிகள்;

அருவியைச் சுற்றிலும் பச்சைப் பட்டாடை உடுத்தியது போல் அமைந்திருக்கும் மரங்களும், செடிகொடிகளும் நீர்வீழ்ச்சியின் அழகை மேலும் மெருகேற்றக் கூடியவை. ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை பயணிகள் ரசிப்பதற்கு என்றே நிறைய அனுகூலமான பகுதிகள் இருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானது வேட்கின்ஸ் தளம். ஜோக் நீர்வீழ்ச்சியைச் சுற்றி இருக்கும் ஸ்வர்ண நதியும், ஷராவதி பள்ளத்தாக்கும் பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமையும்.
சுற்றுலாத் தலங்கள்;
ஜோக் நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் தவறவிடக்கூடாத வகையில் பல சுற்றுலா அம்சங்கள் நிறம்பிய தலங்கள் உள்ளன. அதில், சன்செட் பாயிண்ட், பசுமைப் பள்ளத்தாக்கு, கஜனூர் அணை உள்ளிட்டவை பிரசிதிபெற்றவை.
ஷிமோகா நகரத்திலிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ஆகும்பே, இங்குள்ள சன்செட் பாயிண்ட் காட்சித்தளத்திற்காக பிரசித்தி பெற்றது. பருவநிலை தெளிவாக உள்ள காலங்களில் இந்த காட்சி முனைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

பள்ளத்தாக்கு;
நீரோடைகள் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதிகள், புரண்டோடும் ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக்கொண்ட பசுமையான பள்ளத்தாக்குகள் போன்றவற்றை சன்செட் பாயிண்ட் காட்சி முனையிலிருந்து கண்டு ரசிக்கலாம்.
கஜனூர் அணை;
துங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கஜனூர் அணை ஷிமோகாவில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது ஒரு முக்கியமான பிக்னிக் தலமாகும். யவரேகொப்பா எனும் இடத்தில் லயன் சஃபாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஆர்வமுள்ளவர்கள் இங்கே கண்டிப்பாக பயணம் செய்ய வேண்டும்.

ரசிக்கும் பயணிகள்;
கொட்டும் நீர்வீழ்ச்சியினை பாதுகாப்புப் பகுதியில் இருந்து கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்
நீண்ட நீர்வீழ்ச்சி;
பச்சைவனக் காட்டின் ஊடாக நடம் உடலை சிலிர்க்க வைக்கும் ஜோக் நீர்வீழ்ச்சி
நீர்வீழ்ச்சியின் தோற்றம்;
அடர்வனக் காட்டில் இருந்து சரவதி வனக் காட்டில் பெரிய நீரோடையாக உருவெடுத்து வரும் நீர்
பசுமைக் காடு;
ஜோக் அருவியும், சூழ்ந்துள்ள பசுமைக் மலைக் காடுகளும்
அருவியின் அடிவாரம்;
அருவியில் இருந்து கொட்டும் நீர் சேகரமாகும் பகுதி. நீச்சல் வீரர்களுக்கு செம பாயின்ட்டுங்க…
எப்படிச் செல்வது?
ஷிமோகா சென்றடைய பெங்களூர் சிட்டி தலகுப்பா எக்ஸ்பிரஸ், தலகுப்பா எக்ஸ்பிரஸ், சிமோகா டவுன் பெங்களூரு சிட்டி எக்ஸ்பிரஸ், மைசூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகள் உள்ளன. கண்டிப்பாக ஒரு முறை போகலாம்.. வாருங்கள்..



