Joe Biden: இஸ்ரேல் பயணம்!

ஒற்றுமையை வலியுறுத்த இஸ்ரேல் பயணம்!

இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்தப் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 11வது நாளாக நடைபெற்று வருகிறது.

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி!

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவராகச் செயல்பட்டு வந்தவர் ஒசாமா அல் மசினி. இவர் ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதிகளாகப் பிடித்துவரப்படுவர்களை கையாளுதல் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், காசா முனைமீது இஸ்ரேல் நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஒசாமா அல் மசினி கொல்லப்பட்டார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்த ஐ.நா.வில் ரஷியா கொண்டு வந்த வரைவு தீர்மானம் நிராகரிப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்த ஐ.நா.வில் ரஷியா கொண்டு வந்த வரைவு தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது. போரை நிறுத்த வேண்டும், ஹமாஸ் பிடித்துவைத்துள்ள பணய கைதிகளை விடுவிக்க வேண்டும், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்க வேண்டும், பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டுமென வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ரஷியா கொண்டு வந்த இந்த வரைவு தீர்மானத்தில் ஹமாஸ் தாக்குதலைக் கண்டிக்கவில்லையென அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இந்த வரைவு தீர்மானம்மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தத் தீர்மானம் நிறைவேற 9 வாக்குகள் தேவைப்படும் நிலையில் குறைவான வாக்குகள் மட்டுமே பெற்றதால் தீர்மானம் தோல்வியடைந்தது.

இஸ்ரேல் செல்லும் ஜோப்பைடன்!

இஸ்ரேல் – ஹமாஸ் படைக்கு இடையேயான போர் நடக்கும் சூழலில் இஸ்ரேல் ஜோர்டானுக்கு ஜோப்பைடன் செல்கிறார். ஹமாசின் போர் தாக்குதலை எதிர்கொண்டு ஒற்றுமையை வலியுறுத்த நாளை இஸ்ரேலுக்கு செல்ல உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோப்பைடன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *