INS Imphal: போர் கப்பலின் சோதனை வெற்றி.!

Advertisements

இந்திய கடற்படைக்கு சொந்தமான இம்பால் போர் கப்பலின் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.  

இந்திய கடற்படைக்கு சொந்தமானது ஐ.என்.எஸ். இம்பால் (INS Imphal) போர் கப்பல். உலகின் நவீன போர் கப்பல்களில் ஒன்றான இது, கைடட் மிஸைல் டெஸ்ட்ராயர் (guided missile destroyer) எனும் வகையைச் சேர்ந்தது.

மணிக்குச் சுமார் 56 கிலோமீட்டர் தூரம் பயணிக்கக்கூடிய இக்கப்பல், 164 மீட்டர் நீளம் கொண்டது. சுமார் 7400 டன் எடை கொண்ட இம்பால் போர் கப்பலிலிருந்து தரையிலிருந்து தரைக்கு செல்லும் ஏவுகணைகளைச் செலுத்த முடியும்.

இக்கப்பலை இவ்வருட இறுதியிலோ அல்லது 2024 தொடக்கத்திலோ நாட்டின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிக்க இந்திய கப்பற்படை திட்டமிடப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அக்கப்பலின் திறன்குறித்து பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

அதில் ஒன்றாக இன்று, அக்கப்பலிலிருந்து பிரமோஸ் ஏவுகணை (BrahMos missile) செலுத்தும் பரிசோதனை முயற்சி நடத்தப்பட்டது.

இந்த முயற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்திய கடற்படையின் மேற்கு பகுதி ஆணையம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.

கடந்த 2001 ஜூன் மாதம் பரிசோதனை செய்யப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, 2005ல் இருந்து இந்திய ராணுவத்தின் வான்வழி தாக்குதலுக்கான செயல்பாட்டில் உள்ளது. இந்த ஏவுகணை இந்தியாவின் இஸ்ரோ மற்றும் ரஷிய ராக்கெட் தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒலியின் வேகத்தைவிட 3 மடங்கு அதிக வேகத்தில் பயணித்து, 300 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் திறன் படைத்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *