சாம்பியன் பட்டம் வென்றார் ஜிரி லெஹெகா!

Advertisements

பிரிஸ்பேன்:

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹெகா, அமெரிக்காவைச் சேர்ந்த ரெய்லி ஒபெல்கா உடன் மோதினார்.

இதில் ஜிரி லெஹெகா 4-1 என முதல் செட்டில் முன்னிலையில் இருந்தபோது, ரெய்லி ஒபெல்கா காயம் காரணமாகப் போட்டியிலிருந்து திடீரென விலகினார். இதனால் ஜிரி லெஹெகா சாம்பியன் பட்டம் வென்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *