
ஜிகிரி தோஸ்த், திரைப்படம் இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆன பிரதீப் ஜோஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குனரும், பல விருதுகளை வென்ற குறும்படங்களை இயக்கியவருமான அறன் இயக்கி நடித்துள்ள படம் ஜிகிரி தோஸ்த்.இளைஞர்கள் நடித்து வித்தியாசமான கதை களத்தி்ல் உருவாகி உள்ள இப்படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கோவையைச் சேர்ந்த தயாரிப்பாளர், நடிகருமான பிரதீப் ஜோஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படம், திரையரங்கிகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.இந்நிலையில் கோவை புரூக்பீல்ட்ஸ் மால் வளாகத்தில் உள்ள பி.வி.ஆர்.சினிமாஸ் திரையரங்கில் தனது சகோதரர் பிரவேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வந்த பிரதீப் ஜோஸ் திரைப்படத்தைப் பார்த்தார்.
பின்னர் திரைப்படம் இதுகுறித்து பேசிய தயாரிப்பாளரும் நடிகரும் ஆன பிரதீப் ஜோஸ், தனது தயாரிப்பில் வெளியாகித் திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ள ஜிகிரி தோஸ்த், இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், தாம் என்றுமே கோவை வாழ் மக்களின் ஜிகிரி தோஸ்த் எனத் தெரிவித்தார்…இந்நிகழ்ச்சியில் சோனாலி பிரதீப் உடனிருந்தார்…


