ஆந்திர முதல்வராக நடிக்கும் ஜீவா: ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடக்கம் !

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி ‘யாத்ரா’ என்ற படம் தெலுங்கில் உருவானது. மஹி வி ராகவ் இயக்கிய படத்தில் ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார்.

2019-ம்ஆண்டு வெளியான இந்தப் படத்தை அடுத்து இதன் அடுத்த பாகம் ‘யாத்ரா 2’ என்ற பெயரில் உருவாகிறது. முதல் பாகத்தை இயக்கிய மஹி வி ராகவ் இதையும் இயக்குகிறார்.

இதில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது. இதன் போட்டோஷூட் சமீபத்தில் நடந்தது. நடிகர் ஜீவா, ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் அப்படியே இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *