Japan-Vietnam Relations: 50 ஆண்டுகள் நிறைவடைந்த நல்லுறவு!

ஜப்பான்  –  வியட்நாம்  இடையேயான நல்லுறவு 50 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடுத்து ஜப்பான் இளவரசர் மனைவியுடன் வியட்நாமிற்கு 5 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

வியட்நாம்: ஜப்பானுக்கும் வியட்நாமிற்கும் இடையேயான பரஸ்பர நல்லுறவானது 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை போற்றும் வகையில், ஜப்பானின் பட்டத்து இளவரசர் அகிஷினோ, தனது மனைவியுடன் வியட்நாமிற்கு 5 நாட்கள் சுற்றுப்பயணாம் மேற்கொண்டுள்ளார்.

வியட்நாமின் முதல் அதிபர் ஹோ-சி-மின் வாழ்ந்த இல்லத்தில் அஞ்சலி செலுத்திய, ஜப்பான் இளவரசர் தனது மனைவியுடன் சேர்ந்து மீன்களுக்கு உணவளித்து  மகிழ்ந்தார்.

தற்போது நிலவி வரும் சீனாவின் அச்சுறுத்தலை, எவ்வாறு எதிர்கொள்வது, எனத் தெற்காசிய நாடுகளுடன் பேசி, அவர்களுடன் நல்லுறவைப் பேணுவதற்கான முயற்சிகளை  ஜப்பான் மேற்கொண்டுவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *