Japan Earthquake: சுனாமி எச்சரிக்கை!

Advertisements

ஜப்பானில் அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக இந்த  நிலநடுக்கம் பதிவானதாக ஜப்பான் புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் வடஜப்பான் பகுதியில் இன்று 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் கடற்கரை  பகுதிகளான இஷிகவா, நிலிகட்டா மற்றும் டொயோமா பகுதிகளில் சக்தி  வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் இன்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். 5.5 ரிக்டர் முதல் 7.2 வரை அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கும் ஹோன்ஷூ பகுதியில் 13 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பொதுமக்கள் அச்சத்துடன் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட மத்திய ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஊடக செய்திகள்  கூறுகின்றன. ஜப்பான் வானிலை ஆய்வு மையம், இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மீட்டர் உயரத்திற்கு மேல் கடல் அலைகள் எழலாம் எனவும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் படியாகவும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் விரைவாக உயரமான நிலத்திற்கு அல்லது அருகிலுள்ள கட்டிடத்தின் உச்சிக்கு தப்பிச் செல்லுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத அறிக்கைகள் உடனடியாக கிடைக்கவில்லை. தனது அணுமின் நிலையங்களில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதா என சோதித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *