X Social Network: முடங்கியது எக்ஸ் சமூக வலைதளம்!

இன்று சமூக வலை தளங்கள் நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிப்  போனது.

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சாமானிய மனிதன் உட்பட அனைவரும் சமூக வலை தளம் வாயிலாக தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இநிந்லையில் யூ டியூப், இன்ஸ்டாகிராம், முக நூல், ட்விட்டர் போன்றவை சேவையில் இருந்தன.

சமீபத்தில் ட்விட்டர் சேவைக்குப் பதிலாக எக்ஸ் வலைதளம் பிரபலமானது. ஆனால் தற்போது எக்ஸ்  சேவை முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து எக்ஸ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வராத நிலையில் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

பிரபல சமூக வலைதள நிறுவனமான எக்ஸ்  திடீரென இன்று முடங்கியுள்ளது. பயனாளர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எக்ஸ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வராத நிலையில் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

சமூக வலைதளமான எக்ஸ் கடந்த சில நிமிடங்களாக முடங்கியதால் இணையவாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எக்ஸ் வலைதளம் தற்போது அடிக்கடி இந்த மாதிரியான செயலிழப்பை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *