Jammu Kashmir : ஜம்மு காஷ்மீரில் கடும் துப்பாக்கிச்சண்டை

Advertisements

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மார்கி பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படையினர் நேற்று இரவு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நேற்று இரவு முதல் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கக்கூடும் என்பதால் அங்கு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *