Jammu and Kashmir Bus Accident: பேருந்து கவிழ்ந்து விபத்து!

Advertisements

ஜம்மு & காஷ்மீரில் தோடாவின் அசார் பகுதியில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த  விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 25 பேரின் உடல்கள் தற்போது வரை மீட்டெடுக்கப்பட்டுள்ளன.  காயங்களுடன் மீட்கப்பட்ட 19 பேர் கிஷ்த்வார் மற்றும் ஜிஎம்சி தோடா மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Advertisements

இதுதொடர்பாகப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் நடந்த பேருந்து விபத்து வேதனை அளிக்கிறது. தங்களின் நெருங்கிய உறவுகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர்ன் நிவாரண நிதியிலிருந்து 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மீட்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *