Plane Crashes into a Car: கார் மீது மோதிய விமானம்!

டல்லாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் அருகே சிறியரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

சம்பவத்தன்று மிட்லேண்டிலிருந்து வந்த அந்த விமானம், மெக்கினியில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்ததும், குறிப்பிட்ட ரன்வேயில் விமானத்தைத் தரையிறக்க விமானி முயற்சித்தார். ரன்வேயை தொட்டதும் விமானத்தின் வேகத்தைக் குறைக்க விமானி முற்பட்டபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து சீறிப்பாய்ந்தது.


ரன்வேயை தாண்டி வேலியை உடைத்துக்கொண்டு சென்ற விமானம், எதிரே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த கார்மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காரில் பயணித்த நபர் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விமானத்தில் இருந்த இருவரையும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *