ஜாக்கி சானுக்கு கலைத்துறை பங்களிப்பை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது..!

90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக வலம் வந்த ஜாக்கி ஜானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .சீனாவில் மாஸ் ஹீரோவாக வலம் வந்தார்.இது பல்வேறு வெற்றி படங்களையும் கொடுத்து இருக்கிறார்.

இந்நிலையில் அவரது பங்களிப்பை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. லொகர்னோ விழாவின் கலை இயக்குனர் ஜியோனா ஏ. நஸ்ஸாரோ கூறுகையில், “ஜாக்கி சானின் தாக்கம் மிகவும் ஆழமானது, குறிப்பாக ஹாலிவுட்டில் அதிரடி படங்கள் பார்க்கப்படும் மற்றும் தயாரிக்கும் விதத்தை அவர் மாற்றினார் என்று அவர் தெரிவித்தார்.

ஜாக்கி சான் கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு வெளியான ரைட் ஆன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஜப்பானில் அதிக வசூல் செய்த சீனத்திரைப்படமாகவும், 2023-ல் மலேசியாவில் அதிக வசூல் செய்த சீன படங்களில் டாப் 3 படங்களின் இடத்தை பிடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *