
Anus itching
ஆசனவாய் பகுதியில் எரிச்சல் அல்லது நமிச்சல் ஏற்படுகிறது. அதுவும் பொது இடங்களில் அரிப்பு ஏற்பட்டால் நெளிந்தபடியே பாத்ரூமை தேடி ஓடும் நிலை ஏற்படுகிறது. இதனால் அனைவருக்கும் சங்கடம் ஏற்படுகிறது…
ஆசனவாய் பகுதியில் அரிப்பு ஏற்படுகிறதா, இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை மாற்றத்தால் மனிதனுக்கு சாப்பிடுவது முதல் மலம் கழித்தல் வரை அனைத்திலுமே பிரச்சினைதான். ஒன்று சரியாகச் சாப்பிட முடியாமல் வயிறு உப்புசமாக இருத்தல், ஜீரணமாகாமல் இருத்தல் உள்ளிட்ட பிரச்சினை ஏற்படுகிறது.
இல்லாவிட்டால் போனா போயிகிட்டே இருக்கு. இல்லாட்டி முக்கினாலும் கூட ஆட்டுப்புழுக்கைதான் வருகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் வாழ்க்கை முறைதான். அவ்வாறு பெரும்பாலானோருக்கு உடல் உபாதைகள் ஏற்படும்போது பொதுவாகப் பலருக்கும் ஏற்படுவது என்ன தெரியுமா.

ஆசனவாய் பகுதியில் எரிச்சல் அல்லது நமிச்சல் ஏற்படுகிறது. அதுவும் பொது இடங்களில் அரிப்பு ஏற்பட்டால் நெளிந்தபடியே பாத்ரூமை தேடி ஓடும் நிலை ஏற்படுகிறது. இதனால் அனைவருக்கும் சங்கடம் ஏற்படுகிறது. இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆசனவாய் பகுதியில் ஏற்படும் அரிப்பிற்கு ப்ரூரிடஸ் அனியென அழைக்கிறார்கள்.
ஒரு சில காரணங்களால் இது ஏற்படுகிறது. குறிப்பாக மூலம், வயிற்றுபோக்கு, நோய் தொற்றுகள் இருந்தால் ஆசனவாய் பகுதியில் எரிச்சலை கொடுக்கும். இந்தத் தொற்று தீவிரமாவதை சில அறிகுறிகள்மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆசனவாய் பகுதியில் தீவிரமான அரிப்பு இருக்கும்.

வீக்கம், எரிச்சல் ஆகியவை இருந்தால் நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த அறிகுறிகளின் அர்த்தம். மேலும் அந்தப் பகுதியில் புண் ஏற்பட்டிருந்தால் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். ஆசனவாய் பகுதியில் அரிப்பு என்பது அதிக வெப்பம், அதிக ஈரப்பதமான காலநிலையில் ஏற்படும். வயிற்றுப்போக்கு, சுகாதாரமற்ற கழிப்பிடம், ரசாயன பொருட்களைப் பயன்படுத்துதல், உள்ளாடைகளுக்கு உபயோகப்படுத்தும் சோப்பின் தரம் ஆகியவற்றால் ஏற்படலாம்.
உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும், ஆசனவாய் பகுதியை ஈரப்பதம் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். உடலுறவு மூலமும் தொற்றுகள் பரவுவதால் அரிப்பு ஏற்படலாம். எனவே குழந்தை பேறுக்கு முயற்சிக்காதபோது உடலுறவுக்கு பிறகு அந்தரங்க உறுப்பையும் ஆசனவாய் பகுதியையும் தண்ணீரால் சுத்தப்படுத்த வேண்டும்.

அதுபோல் மலம் கழிக்கும்போது ரத்தம் வந்தால் உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். நாளாக நாளாக மலம் கட்டிக் கொண்டு சிரமப்பட்டு போக வேண்டிய நிலை இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. சுய மருத்துவம் எதையும் செய்யக் கூடாது. அதே வேளையில் உடலுக்குக் குளிர்ச்சியை கொடுக்கும் காய்கறிகள், பழங்களைச் சாப்பிடலாம்.

