தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து, தவறி விழுந்து பலியான காவலரின் குடும்பத்திற்கு, ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் காவலராகப் பணிப்புரிந்து வந்த சங்கர் குமார் என்பவர், தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆற்றுப்பாலத்தில் இருந்து, தவறி விழுந்து உயிரிழந்தார்.
இந்த செய்தி வேதனை அளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
