
இஸ்ரேல் அமைச்சர்கள் மீது, பொருளாதார தடை விதிப்பதாக, பிரிட்டன் உள்பட 3 நாடுகள் அறிவித்துள்ளன . காசா இஸ்ரேல் இடையே நீண்ட நாட்களாக போர் நிலவி வருகிறது.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஆயிரகணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மேற்கு கரை பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் அமைச்சர்கள் இதாமர் பென்கிவிர், பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் வன்முறையை தூண்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் வன்முறையை தூண்டிய இரண்டு இஸ்ரேல் அமைச்சர்கள் மீது, பொருளாதார தடை விதிப்பதாக, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, நார்வே உள்ளட்ட நாடுகள் அறிவித்துள்ளன.
சொந்தமாக இந்த நாடுகளில் உள்ள சொத்துக்கள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நாடுகளில் உள்ள இஸ்ரேல் அமைச்சர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது-. மேலும் இந்த நாடுகளுக்கு, அந்த அமைச்சர்கள் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


