Premalatha Vijayakanth : 2026 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி யிடவும் தயார் – பிரேமலதா!

Advertisements

2026 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி யிடவும் தயார் என தேமுதிக  பொதுச்செயலாளர் பிரேமலதா  தெரிவித்தார்
தேமுதிக. சார்பில் இன்று மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இன்று முதல் 4 நாட்களுக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகளுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முக்கிய ஆலோசனை நடத்த வருகிறார். இன்று நடைபெற்ற கூட்டத்தில்,
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் வரவேற்பதாகவும், தனித்து போட்டி யிடவும் தயார் என தெரிவித்தார். தொடர்ந்து ராஜ்யசபா சீட் குறித்த ஒப்பந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடவில்லை. என தெரிவித்தார். இதையடுத்து  த.வெ.க.வுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு  விஜயிடம் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *