சர்ச்சைகளுக்குப் பெயர்போன பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது நண்பர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளி மாநிலம், வெளிநாடுகளில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் 32 அறைகளிலும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், யூடியூபர் டிடிஎஃப் வாசனும் அவரது நண்பர்களும் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காகக் காத்திருந்த பக்தர்களிடம் தான் ப்ராங்க் வீடியோ எடுத்துச் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த வீடியோவில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் அவருடைய ஒளிப்பதிவாளர் அசீஸ் ஆகியோர் திருப்பதியில் சாமி தரிசனத்திற்காகப் பக்தர்கள் காத்திருந்த அறையைத் திறப்பது போன்ற வீடியோ இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுள்ளார். அதனை tirupathi Funny video என்ற பெரியல் டிடிஎஃப் வாசன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானது.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் குறும்பு வீடியோ எடுப்பது கேவலாகச் செயல். அத்தகைய நபர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கத் தேவையான ஏற்பாடுகளைத் தேவஸ்தான விஜிலன்ஸ் துறை செய்து வருகிறது.


