Bigg Boss Tamil 7: ஓப்பன் நாமினேஷன் வைத்துப் போட்டியாளர்கள் தேர்வு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது வார எவிக்‌ஷனுக்காக ஓப்பன் நாமினேஷன் வைத்துப் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் அக்டோபர் 1-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் முதல் வார இறுதியில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். இதற்கு மறுநாளே உடல்நிலை சரியில்லை எனக்கூறி எழுத்தாளர் பவா செல்லதுரை பாதியிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதன் காரணமாக இரண்டாவது வாரம் எலிமினேஷன் நடைபெறவில்லை.

இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது வார எலிமினேஷனில் 11 பேர் இடம்பெற்று இருந்தனர். இதிலிருந்து குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளரான விஜய் வர்மா நேற்று எலிமினேட் செய்யப்பட்டார்.
விஜய் வர்மா எலிமினேட் ஆன பின்னர் தற்போது பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 15 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அவர்களுக்கிடையே கடும் போட்டியும் நிலவி வருகிறது.

வழக்கமாகப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாட்கள் செல்லச் செல்லப் போட்டி கடுமையாகும்போது தான் ஓப்பன் நாமினேஷன் வைக்கப்படும். ஆனால் இந்தச் சீசனில் 4-வது வாரத்திலேயே ஓப்பன் நாமினேஷன் வைத்துப் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிக்பாஸ். அதன்படி இந்த வாரம் ஓப்பன் நாமினேஷனில் மாயா, பிரதீப் ஆண்டனி, மணிச்சந்திரா ஆகியோரை போட்டியாளர்கள் வரிசையாக நாமினேட் செய்துள்ளனர்.

இதில் மணி, ரவீனாவை சந்தோஷமாக வைத்திருப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதாகக் கூறி ஐஷூ நாமினேட் செய்துள்ளார். அதேபோல் யுகேந்திரன் மாயாவை நாமினேட் செய்தபோது, அவர் மாயமாவே இருப்பதாகக் கூறி நாமினேட் செய்த காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *