
செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பல ஆண்டுகளாக பல்நோக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரிய சிறந்த மருத்துவமனைகளில் ராஜீவ்காந்தி மருத்துவமனை ஒன்று. இங்கு MRI ஸ்கேன் முதல் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கும் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். செவிலியர்கள் தங்கியுள்ள விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அசம்பாவிதங்கள் தவிர்க்க பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

