ISIS: பயங்கரவாதி கைது!

Advertisements

என்ஐஏ-வால் தேடப்பட்ட வந்த பயங்கரவாதியைப் போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.

புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஷாபி உஸ்ஸாமா என்கிற ஷானவாஸ் டெல்லியில் தனது மறைவிடத்தில் பதுங்கி இருந்தபோது, டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர். பொறியியலாளராக இருந்து வந்த ஷானவாஸ் புனே ஐஎஸ்ஐஎஸ் வழக்கில் தேடப்பட்டு வந்தார். டெல்லியைச் சேர்ந்தவரான இவர் புனேவுக்குச் சென்றார்.

கடந்த ஜூலை மாதம் புனேவில் கூட்டாளிகள் இருவருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பி வந்து டெல்லியில் தலைமறைவாக இருந்து வந்தார். ஷானவாஸ் தலைக்கு என்ஐஏ ரூ.3 லட்சம் பரிசுத்தொகை அறிவித்திருந்த நிலையில், டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பயங்கரவாதிகளையும் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவர்கள்குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடமிருந்து ஐஇடி வெடி தயாரிக்ககூடிய திரவம் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *