மல்லை சத்யா – வைகோ மோதல்….துரோகம் செய்து விட்டாய் !

Advertisements
தமிழ் ஈழ விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரனுக்கு எப்படி ஒரு மாத்தையா எதிரியாக மாறினாரோ அதேபோல் மல்லை சத்யா மாறிவிட்டார் என வைகோ பேசியதால் மதிமுகவில் இப்பொழுது உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது.கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதியே மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் , துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் இடையே கடுமையான மல்யுத்தம் தொடங்கிவிட்டது .ஜூன் 20 ஆம் தேதி நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் மல்லை சத்யாவை வைத்துக்கொண்டு நேருக்கு நேராக எனக்கு எதிராக லாபி செய்றவங்க வெளியே போங்க என்று எச்சரித்தார் வைகோ. இந்த நிலையில் மதிமுக வின் அண்ணா பிறந்தநாள் மாநாட்டுக்கான சென்னை மண்டல செயல் வீரர்கள் கூட்டம் பூந்தமல்லியில் 10ஆம் தேதி நடைபெற இருந்தது .
இந்த மாநாட்டிற்கான வரவேற்பு பதாகைகள் விளம்பரங்களில் மல்லை சத்யா பெயரோ படமா இருக்கக் கூடாது என முன்னதாகவே மதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து உத்தரவு  பிறப்பிக்கப்பட்டு இருந்தது . இதன்படி சென்னை மண்டல மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் மல்லை சத்யாவின் பெயர் மற்றும் படங்கள் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை .
இதற்கு முன்னதாக வைகோ அளித்த பேட்டியில் மல்லை சத்தியா சமிபகாலமாக கட்சியின் எந்த கூட்டங்களில் கலந்து கொண்டாலும் இறுக்கமான முகத்தோடு தான் இருக்கிறார். சமீபத்தில் அவர் இங்கிலாந்து பயணம் மேற்கொண்ட போது கூட மாமல்லபுரம் தமிழ் சங்கத் தலைவராகத்தான் சென்றாரே ஒழிய மதிமுக காரனாக செல்லவில்லை . என்னிடம் எதுவும் சொல்லவும் இல்லை . அங்கே அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் என் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை என்று காரசாரமாக பேச தொடங்கிய வைகோ மேலும் தனது பேச்சை தொடர்ந்தார்.விடுதலைப்புலிகள் வரலாற்றில் மாத்தையாவை விட பிரபாகரனுக்கு விசுவாசமாக யாரேனும் ஒருவர் இருந்தது உண்டா.?  ஈழம் அமைந்தால் மாத்தையா வைத்தான் தலைமை அமைச்சராக முதலமைச்சராக ஆக்குவேன் என பிரபாகரன் என்னிடமே சொல்லியிருக்கிறார் . அந்த பிரபாகரனை கொலை செய்வதற்கே மாத்தையா துணை போனார் என்பதை  பொட்டம்மன் தான் கண்டுபிடித்து சொன்னார் .
இப்படி கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட அனைத்து பேரையும் வைத்து பிரபாகரன் கூட்டம் நடத்தினார் . அந்த கூட்டத்தில்தான் தலைவர் பிரபாகரனை கொலை செய்ய வேண்டும் என்ற சதி திட்டத்திற்கு நான் உடன்பட்டது உண்மைதான் என்று மாத்தையா அழுது கொண்டே சொன்னார் . அப்போது பிரபாகரன் என் வாழ்க்கையில் நான் ஒரு சொட்டு கண்ணீர் கூட விட்டது கிடையாது உண்னை என் பிள்ளை மாதிரி வைத்திருந்தேன் உன்னைத்தான் முதலமைச்சர் ஆக்குவேன் என்று சொல்லி இருந்தேன் நீ எப்படி துரோகம் செய்தாய் என கேட்டார் .
ஒரு காலத்தில் நன்றாக பணியாற்றி விட்டு பின்னர் துரோகம் செய்வது என்பது சரித்திரத்தில் நிறைய பார்த்திருக்கிறேன் நான் அதைப் பற்றி எல்லாம் நான் இப்போது விரிவாக பேச விரும்பவில்லை என்று வைகோ பேசினார் . மல்லை சத்யாவை மறைமுகமாக வைத்து வைகோ பேசியது தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது குறித்து சத்யா கூறும் பொழுது நான் மிகவும் காயம்பட்டு இருக்கிறேன்.
ஜூன் மாதம் நான் இங்கிலாந்து நாட்டுக்கு சென்ற போது அங்கு கலந்து கொண்ட அத்தனை நிகழ்ச்சிகளிலும் பொதுச் செயலாளர் வைகோவின் பெயரைச் சொல்லி அவருடைய தம்பியாகத்தான் வந்திருக்கிறேன் என்று தான் பேசினேன். அங்கு நான் பேசிய போதும் ஈழத் தமிழர்களுக்காக வைகோ அவர்கள் வைத்த கோரிக்கையைத்தான் முன்னெடுத்து பேசினேன் இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரது பேட்டி வெளிவந்திருக்கிறது என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவேன் என்றார் மல்லை சத்யா .
இதற்கிடையே சாத்தூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நெல்லை மண்டல அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் துரை வைகோ பேசும்போது மதிமுகவுக்கு இது முக்கியமான காலகட்டம் நாம் எல்லோரும் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து விட்டோம் என்பதை உணர்த்தியாக வேண்டும் நம்மிடம் பண பலம் இல்லை . ஆனால் உறுதி கொண்ட தொண்டர்கள் இருக்கிறார்கள் என பேசி இருக்கிறார் .மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் துணைப் பொதுச் செயலாளர் மல்லைசத்யாவும் கடந்த ஆறு மாத காலமாகவே மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்கள் என்பது முக்கிய செய்தியாகும்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *