
வெது வெதுப்பான நீரில் நெய் சேர்த்து குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இன்று பலரும் பழங்களையும், ட்ரை ஃப்ரூட்ஸ்களையும் அதிக அளவில் எடுத்து வருகின்றனர். இது பலனைத் தரும் என்றாலும் தினமும் நெய் அருந்துவதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எனக் கூறுகிறது ஆயுர்வேதம். அதாவது தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் சிறிது நெய் சேர்த்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது என ஆயுர்வேதம் கூறுகிறது.
ஆயுர்வேதத்தின் படி, நெய் செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் நெய் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் சில நன்மைகள் சிலவற்றை காணலாம்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது: வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடிக்கும்போது அது குடல்களை சுத்தப்படுத்தி செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
உடல் ஆற்றலை அதிகரிக்கிறது: நெய் உடலுக்கு வலிமையும் ஆற்றலையும் நீண்ட காலத்துக்கு அளிக்கிறது. அதாவது உடல் சோர்வின்றி நாள் முழுவதும் சுறுசுறுப்பாகக் காணப்படுவோம்.
பளபளக்கும் சருமம்: நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தை பளபளப்பாக்க உதவும்.
மாதவிடாய் வலி நிவாரணி : பெண்கள் தினமும் நெய்யை சாப்பிட்டு வந்தால் ஹார்மோன் சமநிலையை தன்னை பராமரிக்க உதவுகிறது. அதேபோல் மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் உள்ளது.


