திருப்பூர் ரயில்வே மேம்பாலத்தில் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தில் உள்ள மூட்டை மீது வளர்ப்பு நாய் ஒன்று அமர்ந்து கொண்டு ஹாயாக வேடிக்கை பார்த்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தலைக்கவசம் அணியாமல் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வதும், அந்த வாகனத்தின் பின் இருக்கையில் வைக்கப்பட்ட மூட்டையின் மீது செல்லப் பிராணியான நாய் ஒன்று ஹாயாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே வருவதும் திருப்பூரின் பிரதான பகுதியான ரயில்வே மேம்பாலத்தில் சக வாகன ஓட்டிகளுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
அந்தப் பெண் தனது இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றபோது உடன் செல்லப் பிராணியான வளர்ப்பு நாயையும் அழைத்துச் சென்றுள்ளார், அப்போது இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் உள்ள வைக்கப்பட்டிருந்த மூட்டையின் மீது ஹாயாக அமர்ந்து கொண்டசெல்ல நாய் திரும்பித் திரும்பிப் பார்த்து வேடிக்கை பார்ப்பதும் அதனைப் பின்தொடர்ந்து வாகனங்களில் செல்லும் நபர்கள் ஆச்சரியத்துடன் அதனைக் கண்டு ரசிப்பதும், வாகன ஓட்டி ஒருவர் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார், இந்த வீடியோ காட்சி ஆனது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
