டெல்லியில் ஜனவரி 1ம் தேதி முதல் பாரத் டாக்சி சேவை தொடக்கம்..!

Sahakar Taxi Cooperative நிறுவனத்தின் சார்பாக, இந்த நிறுவனம் மத்திய அரசால் தொடங்கப்படுகிறது. ஊபேர், ஓலா, ரேபிடோ போல கார், டு வீலர் வாகனங்களை ஆப் மூலம் புக் செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய், ஐபோன் போன்றவற்றில் ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். டிரைவர்களுக்கு வருவாயில் 80 சதவிகிதம் அளிக்கப்படும்.

கமிஷன் கிடையாது. நல்ல பணிக்சூழலை ஏற்படுத்தி கொடுப்பது இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். வாகனத்தை ஓட்டும் டிரைவர்களை  டெல்லி போலீசார் கண்காணிப்பார்கள். இதனால், பயணிகளின் பாதுபாப்பு உறுதி செய்யப்படுகிறது.

பொதுவாக, பீக் ஹவர்களில் டிரைவர்கள் அதிக தொகை கேட்டு வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த புகாரை தவிர்க்கவே, ஊபேர், ஓலா, ரேபிடோ மாற்றாக பாரத் டாக்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, பாரத் டாக்சியில் 56 ஆயிரம் டிரைவர்கள் இணைந்துள்ளனர். டெல்லியை அடுத்து பிப்ரவரி 1ம் தேதி ராஜ்கோட்டில் இந்த சேவை தொடங்குகிறது. தொடர்ந்து, நாட்டின் 20 நகரங்களுக்கு இந்த சேவை விரிவு படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *