எச்-1பி விசாவிற்கு ஆண்டுக்கு 88 இலட்சம் ரூபாய் கட்டணம்..!

Advertisements

எச்-1பி விசாவிற்கு ஆண்டுக்கு 88 இலட்சம் ரூபாய் கட்டணமா என்ற கேள்விற்கு அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் எச்-1பி விசா பெற ஆண்டுதோறும் 88 இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த புதிய உத்தரவு இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவித்த நிலையில், 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என தெரிவித்தனர்.

பின்னர், 2024 ஆம் ஆண்டு எச்-1பி விண்ணப்பதாரர்களில் 71 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தவுள்ளது. இந்நிலையில், 88 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்ட எச்-1பி விசா கட்டணம் வருடாந்திர கட்டணம் அல்ல, ஒரு முறை விண்ணப்பக் கட்டணம் மட்டுமே என அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், எச்-1பி விசாக்களை வைத்திருப்பவர்களுக்கும் அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்களுக்கும் மீண்டும் அமெரிக்கா வருவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *