தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாது இந்திப் படங்களில் நடித்தும் தென்னிந்தியாவின் பிரபல நடிகராக வலம் வருகிறார் . கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ரஜினிக்கு மருமகன் ஆனார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2022 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா தனுஷ் தம்பதியினர் பிரிவதாக அறிவித்தனர்
இதற்கிடையே ஐஸ்வர்யா தனுஷ் குடும்ப பிரச்சனை நீதிமன்றம் சென்றது இருவரும் விவாகரத்து பெற்றார்கள் தற்பொழுது தனுஷ் தனியாக வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யாவும் தனியாக வாழ்ந்து வருகிறார் . இந்த நிலையில் தற்பொழுது பிரபல இந்தி நடிகையான மிருணாள் தாக்கூரை நடிகர் தனுஷ் காதலித்து வருவதாக கூறப்படுகிறது
சமீப காலமாக இவர்கள் ஒருவரை ஒருவர் கைகோர்த்தபடி வலம் வரும் புகைப்படங்கள் இடம் பெற்று வருகின்றன . பிரபல இந்தி நடிகை ஆன மிருணாள்தாக்கூர் ஒரு நேரடியாக தமிழ் படத்தில் கூட நடிக்கவில்லை ஆனால் இங்கு அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் . தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சீதாராமம் ஹாய் நானா ஆகிய படங்களின் மூலமாக இவர் சற்று அறிமுகமானவர்
மிருணாள் ஹிந்தியில் கும்கும் பாக்கியா என்னும் தொலைக்காட்சி சீரியல் மூலமாக அறிமுகமானவர் தற்பொழுது ஏராளமான இந்தி மராத்டி தெலுங்கு நடித்து வருகிறார் சமீபத்தில் இவர் நடித்த சன் ஆப் சர்தார் ரெண்டு திரைப்பட விழா நடைபெற்றது இதில் தனுஷ் கலந்து கொண்டார். இது மட்டுமல்லாது தனுஷ் நடித்த இந்தி படமான தேரே இஷ்க் மெயின் என்ற திரைப்பட விழாவிலும் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்
தனுசுக்கு42 வயதாகிறது.மிருணாள்தாக்கூருக்கு 33 வயதாகிறது இருவரும் கடந்த ஆண்டிலிருந்து டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் மிருணாள் தாக்கூர் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மும்பையில் முப்பத்தி மூணாவது பிறந்தநாளை கொண்டாடினார் . இதற்காக சிறப்பு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் பல நடிகர்கள் கலந்து கொண்டனர் நடிகர் தனுஷும் கலந்து கொண்டார் அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு மிருணாள் தாக்கூர் அவரிடம் ஏதோ சொல்வது போன்ற வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது
ஏற்கனவே அவர்கள் இருவரும் டேட்டிங் இருப்பதாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இப்பொழுது இதை உறுதி செய்யும் வகையில் இருவரும் இணைந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன . முன்னதாக நடிகை காஜோல் நடித்த மா பட சிறப்பு விழாவிலும் தனுஷ் மிருணாள் ஜோடி ஒன்றாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று தொடர்ந்து இருவரும் காதல் மற்றும் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதால் விரைவிலேயே இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என பேசப்படுகிறது .

