Advertisements

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 63 ஆவது போட்டியில் சென்னையை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 19 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 63 ஆவது போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக பிரேவிஸ் 44 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 70 ரன்கள் எடுத்து அசத்தினார்.
Advertisements


