ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை : பேச்சுவார்த்தை தோற்றால் ராணுவத் தாக்குதல் தொடுக்க டிரம்ப் உத்தரவு…!

ஈரான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், பெரிய அளவிலான தாக்குதலைத் தொடுக்க அமெரிக்க ராணுவத்திடம் அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஈரான் போர் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோளின் பேரில் திட்டமிடப்பட்ட ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார். இந்த பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் முக்கியமாக, ஈரானுக்கு அணு ஆயுதங்கள் இல்லை என்பதும் அடங்கும் என்று தெரிவித்தார்.

ஈரான் உடனான உடன்பாடு எட்டப்படாத பட்சத்தில், அவர்கள் மீது ஒரு முழுமையான, பெரிய அளவிலான தாக்குதலைத் தொடுக்கத் தயாராக இருக்குமாறு அமெரிக்க ராணுவத்திடம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *