
துபாய்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவின. இறுதியில் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக தொகையாக ரூ. 24.75 கோடிக்குக் கொல்கத்தா அணி வாங்கியது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில், இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) ‘டி-20’ கிரிக்கெட் தொடர், 2008 முதல் நடத்தப்படுகிறது. இதன் 17வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ‘மினி’ ஏலம் துபாயில் இன்று நடக்கிறது. இதன்மூலம் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம், முதன்முறையாக வெளிநாட்டில் நடத்தப்படுகிறது.
மொத்தம் 333 பேர் (214 இந்தியர், 119 வெளிநாட்டு வீரர்கள்) ஏலம் விடப்படுகின்றனர். இதிலிருந்து 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 77 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 23 வீரர்களுக்கு அடிப்படை ஏலத்தொகையாக ரூ. 2 கோடியும், 13 பேருக்கு ரூ. 1.5 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தி

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவின. இறுதியில் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக தொகையாக ரூ. 24.75 கோடிக்குக் கொல்கத்தா அணி வாங்கியது.
நியூசி., அணியின் பேரில் மட்சல்லை ரூ.14 கோடிக்குச் சென்னை அணியும்,
மேற்கு இந்திய அணியின் ரோவ்மென் பவல்லை ரூ.7.4 கோடிக்கு ராஜஸ்தான் அணியும்,
ஆஸி., வீரர் டிராவிஸ் ஹெட் ரூ.6.80 கோடிக்கு ஐதராபாத் அணியும்,
இங்கிலாந்து வீரர் ஹாரி பரூக்கை ரூ.4 கோடிக்கு டில்லி அணியும்,
இலங்கை வீரர் ஹசரங்கை ரூ. 1.5 கோடிக்கு ஐதராபாத் அணியும்,
நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.80 கோடிக்குச் சென்னை அணியும் ஏலம் எடுத்துள்ளன.


