Sabarimala Temple:சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு!

Advertisements

ஐப்பசி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது.

திருவனந்தபுரம்:சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜை சீசன் காலத்தில் அதிக நாட்கள் திறக்கப்பட்டிருக்கும். மேலும் மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறந்திருக்கும்.

அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. வருகிற 21-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு நடை சாத்தப்படும். அது மட்டுமின்றி புதிய மேல்சாந்திகள் தேர்வு நாளை (17-ந்தேதி) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *