CSK Team Players 2024: இளம் வீரர்களைத் தட்டி தூக்கிய சென்னை!

Advertisements

உலகக்கோப்பை தொடரில் அசத்திய இளம் வீரரான நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை ரூ. 1.80 கோடிக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. இதேபோல நியூசிலாந்து வீரரான டேரில் மிட்செலை ரூ. 14 கோடிக்குச் சென்னை அணி ஏலத்தில் வாங்கியது.

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரேனா அரங்கத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கியது. ஐபிஎல் சேர்மன் அருண் துமல் தொடக்க உரையாற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதல் முறையாக ஆண்களுக்கான ஐபிஎல் ஏலத்தை மல்லிகா சாகர் நடத்துகிறார். இந்த ஏலத்தின் முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரோவ்மன் பவல் ரூ.7.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

இவரது அடிப்படை விலை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரூ.7.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவிய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ரூ. 2.80 கோடிக்கு விளையாடி வந்த ரோவ்மன் பவலை தற்போது ஆர் ஆர் அணியானது ரூ.7.40 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இங்கிலாந்து வீரரான கிறிஸ் வோக்சை ரூ. 4.20 கோடிக்குப் பஞ்சாப் அணி ஏலத்தில் வாங்கியது.

நியூசிலாந்து வீரரான டேரில் மிட்செலை ரூ. 14 கோடிக்குச் சென்னை அணி ஏலத்தில் வாங்கியது.

இந்திய பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேலை ரூ. 11.75 கோடிக்குப் பஞ்சாப் அணி அணி ஏலத்தில் வாங்கியது.

தென் ஆப்பிரிக்க வீரரான ஜெரால்டு கோட்ஸியை ரூ. 5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான பேட் கம்மின்சை ஏலத்தில் எடுக்கப் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அவரை ரூ. 20.50 கோடிக்குச் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலத்தில் வாங்கியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வீரராக ஆப்கானிஸ்தானை சேர்ந்த அஸ்மத்துல்லா ஓமர்சாயை ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.

இந்திய ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூரை ரூ. 4 கோடிக்குச் சென்னை அணி ஏலத்தில் வாங்கியது.

உலகக்கோப்பை தொடரில் அசத்திய இளம் வீரரான நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை ரூ. 1.80 கோடிக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.

இலங்கை வீரரான வனிந்து ஹசரங்காவை ரூ. 1.50 கோடிக்குச் சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.

ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை ஏலத்தில் எடுக்கச் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் ரூ. 6.80 கோடிக்குச் சன்ரைசர்ஸ் அணி அவரைத் தட்டி தூக்கியது.

கருண் நாயர், ஸ்டீவ் சுமித், மணிஷ் பாண்டே ஆகிய வீரர்களை முதல் சுற்றில் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட்டை ரூ. 6.80 கோடிக்குச் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.

இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ரூ. 4 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *