டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்.!

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 48 ஆவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 19 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 48 ஆவது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில், டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் தலைமையிலான வீரர்களும் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர்.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை மோதியுள்ளன. அதில் சென்னை அணி 20 முறையும், டெல்லி அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, இன்றையப் போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *