Investors Conference In Spain: ஸ்பெயினில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!

முதலமைச்சர் ஸ்டாலின் 8 நாட்கள் அரசுமுறை பயணமாக கடந்த 27ஆம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டார். இந்நிலையில் ஸ்பெயின் சென்றுள்ள அவரை தூதர் தினேஷ் கே. பட்நாயக் வரவேற்றார்.

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார்.

அங்கு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடுக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை ஸ்பெயின் – தலைநகர் மேட்ரில் தூதர் தினேஷ் கே. பட்நாயக் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முதலமைச்சர் ஸ்டாலின் உடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளார்.

ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சை (Novak Djokovic) சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தனது அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சர்ப்ரைஸ் இன் தி ஸ்கைஸ் என பதிவிட்டுள்ளார். அதாவது நடுவானில் நிகழ்ந்த ஆச்சரியம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *