International Tennis Federation: நோவக் ஜோகோவிச் புதிய சாதனை!

சர்வதேச டென்னிஸ் விளையாட்டு அரங்கில் செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் தரவரிசை பட்டியலில் புதிய சாதனை படைத்துள்ளார். டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து  400 வாரங்கள் முதலிடத்தில் இருந்து  சாதனை படைத்துள்ளார்.

ஏ.டி.பி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் நோவக் ஜோகோவிச்  வென்றதன் மூலம் இந்த சாதனை படைத்துள்ளார். இந்த வாரமும் 1,300 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 11,245 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து 11ஆவது வாரமாக முதலிடத்தில் நீடிக்கிறார். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இதன்படி, 400 வாரங்கள் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்து சாதனையை படைத்துள்ளார். மேலும் இச்சாதனையை படைக்கும் முதல் நபர் என்ற பெருமையையும்  ஜோகோவிச் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஆடவர் பிரிவில் ரோஜர் பெடரர் 310 வாரங்கள் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல்  இவரை தொடர்ந்து மகளிர் பிரிவில் 377 வாரங்கள் முதலிடம் பிடித்திருந்த ஸ்டெஃபி கிராஃப் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *