IndiGo: விமான சேவை ரத்து!

சென்னையில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் புறப்பட இருந்தது. அப்போது பயணிகளின் உடைமைகளை  ஏற்றி வந்த  டிராக்டர் விமானத்தின் மீது உரசியது. இதனால் விமானத்தில் லேசான சேதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இண்டிகோ விமானத்தின் 24 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் சேதம் ஏற்பட்ட காரணத்தால் பழுது பார்க்க வேண்டி  உள்ளதால்  இண்டிகோ  விமானத்தின்  மொத்தம் 24 சேவைகளை ரத்து செய்துள்ளதாக  இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து பழுது பார்க்கும்  பணி தொடர்வதால்  சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும்,  மீண்டும் சேவை தொடங்கும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால்  சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாகவும் பயணிகள் அவதிக்குள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *